.
பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் நடு வீதியில் வைத்து எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது. பாகிஸ்தான் சியல்கொட்டிலுள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் ஏற்றுமதி முகாமையாளராக கடமையாயாற்றும் பிரியந்த குமார என்பவரே அந்த தொழிற்சாலையின் ஊழியர்களினால் அடித்து, எரியூட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை இஸ்லாமிய சட்டத்தின் கீழான புனித கொலையென கூறப்பட்டுளள்து.
இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுளளதாகவும், சம்மந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன்னர் கொண்டுவரப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ள அதேவேளை இந்த சம்பவம் நடைபெற்ற நாள் பாகிஸ்தானுக்கு ஒரு கருப்பு நாள் எனவும் இம்ரான் கான் மேலும் தெரிவித்துள்ளார்.
தான் “நேரடியாக இந்த விசாரணைகளை கண்காணிக்கவுள்ளதாகவும், இந்த விசாரணைகளில் எந்தவித மோசடிகளும் இடம்பெற வாய்ப்பு வழங்க மாட்டேன்” எனவும் பாகிஸ்தான் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
இறந்த நபர் 7 வருடங்களாக குறித்த தொழிற்சாலையில் கடமையாற்றிவருகிறார். தொழிற்சாலையின் திருத்த பணிகளின் போது முஹமது நபிக்கு எதிரான பதாதைகளை அவரிடமிருந்ததாகவும், அதனால் கோபமடைந்த சில ஊழியர்கள் நேற்று வெள்ளிக்கிழமை குறித்த தொழிற்சாலையில் பிரியந்த தியவதான இருந்த இடத்தை சுற்றி வளைத்து அவரை தாக்கியுள்ளனர். அவரை தரையில் தூக்கி வீசி, பலர் அவரை கொடூரமாக தாக்கியதோடு எரியூட்டியுள்ளனர்.
குறித்த சம்பவத்தை வீடியோ பதிவு செய்து வெளியிட்டதோடு, பலர் செல்பி எடுத்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் விசாரைணகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள அதேவேளை, 50 இற்கும் மேற்பட்டவரக்ள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
