நாடாளுமன்றத் தேர்தலை தொடர்ந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

நாடாளுமன்றத் தேர்தலை தொடர்ந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் உடனடியாக நடத்தப்படும் என தேர்தல்
ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை
உரிமை மனுக்கள் தொடர்பாக உயர் நீதிமன்றம் 22.08.2024 அன்று வழங்கிய தீர்ப்பை தேர்தல் ஆணைக்குழு முழு கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளதாக
அறிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு தனது பங்களிப்பை முழுமையாக புரிந்து கொண்டுள்ளதுடன், இலங்கை மக்களின் ஜனநாயக உரிமைகளை
பாதுகாப்பதற்காக செயற்படுவதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, கடந்த ஓகஸ்ட் மாதம் 22, 2024 அன்று உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி, சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட
தேர்தலை நடத்துவதன் பங்கைக் கருத்திற் கொண்டு, உள்ளூராட்சித் தேர்தலுக்கான திகதியை
விரைவில் நிர்ணயிக்க ஆணைக்குழு கூடவுள்ளது.

Social Share

Leave a Reply