இந்து சமுத்திர மாநாட்டில் ஜனாதிபதி கோட்டா பங்கேற்கிறார்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் இடம்பெறவுள்ள ஐந்தாவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (03.12) இலங்கையிலிருந்து புறப்பட்டார்.

இந்து சமுத்திரம் சார்ந்த நாடுகளில் மற்றும் அச்சமுத்திரத்தை பரவலாக பயன்படுத்துகின்ற ஏனைய நாடுகளை பாதிக்கின்ற பொது அபிலாசைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடும் நோக்கத்தில் 2016 ஆம் ஆண்டு “ இந்து சமுத்திர மாநாடு” ஆரம்பிக்கப்பட்டது. இதன் நான்காவது மாநாடு 2019 இல் மாலைதீவில் நடைபெற்றதோடு அங்கு“ இந்து சமுத்திர வலயத்தின் பாதுகாப்பும் சம்பிரதாயமற்ற சவால்கள்” தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.

“சுற்றாடல், பொருளாதாரம், தொற்றுப்பரவல்“ என்பதை தொனிப்பொருளாகக் கொண்ட ஐந்தாவது மாநாடு, இன்றும் (04.12) நாளையும் (05.152) அபுதாபியில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆரம்ப உரை நிகழ்த்தவுள்ளார்.

வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோர் இந்த மாநாட்டுக்காக ஐக்கிய அரபு இராட்சியத்துக்கு பயணமாகியுள்ளனர்.

இந்த பயணத்துக்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு சென்ற ஜனாதிபதி சாதாரண பயணிகள் தளத்துக்கு சென்று, விமான நிலைய சேவைகளையும், பணிகளையும், பார்வையிட்டதோடு மக்களுடன் சுமூகமாகக் கலந்துரையாடினார்.

இந்து சமுத்திர மாநாட்டில் ஜனாதிபதி கோட்டா பங்கேற்கிறார்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version