பொறாமை, வெறுப்பு அரசியல் முறைமையிலிருந்து விலகி நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க
வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கொழும்பு கிழக்கு தேர்தல் தொகுதி கட்சி செயற்பாட்டாளர்களுடன் இன்று (03.10) இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
இளைஞர்களை நாட்டின் அபிவிருத்திக்கு புதிய தொழில்முனைவோராக உருவாக்க வேண்டும். பிரச்சினைகளுக்கு பதில்களும் தீர்வுகளும் வழங்கப்பட வேண்டும்.
இலட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்புகள் இல்லாதிருக்கும் போது, அதிக முதலீடுகளை மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு முதலீட்டாளர்களை, சர்வதேச சமூகத்தினரை கேட்டுக் கொள்கிறோம்.
அந்நிய நேரடி முதலீடு நாட்டிற்கு வருவதை விரும்புகிறோம். நாட்டில் தகவல் தொழிநுட்ப பூங்காக்களை உருவாக்கி தகவல் தொழிநுட்ப ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். உலகிற்கு ஏற்ற கல்வியும் ஸ்மார்ட் கல்வியும் மிக்க குடிமக்களும் உருவாக்கப்பட வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்தைத் தொடர்ந்து பொதுத் தேர்தல் வரும்போது அதனூடாக நாட்டு மக்களின் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தீர்க்கப்பட வேண்டும்.
சொந்தக் காலில் நிற்கக்கூடிய பெருமைக்குரிய தலைமுறையை உருவாக்கி, அனைத்து மக்களையும் உள்வாங்கிய அபிவிருத்தி யுகத்தை உருவாக்கித் தருவோம். இது ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைநோக்கு எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.