LPL இன்று ஆரம்பம் – பார்வையாளர்கள் அனுமதி

இன்று லங்கா பிரீமியர் லீக் போட்டி தொடர் ஆம்பமாகவுள்ளது. ஐந்து அணிகள் மோதும் இந்த தொடர் இன்று கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இரவு 7.30 இற்கு ஜப்னா கிங்ஸ், கோல் கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியோடு ஆரம்பிக்கவுள்ளது.

இந்த தொடரில் அணிகளின் முகாமைத்துவங்கள் மாற்றம் பெற்றுள்ளமையினால் கடந்த முறை பாவிக்கப்பட்ட பெயர்கள் மாற்றபட்டுள்ளன.

கண்டி வொரியர்ஸ்
கொழும்பு ஸ்டார்ஸ்
காலி கிளாடியேட்டர்ஸ்
ஜப்னா கிங்ஸ்
தம்புள்ள ஜியண்ட்ஸ்


ஆகிய அணிகள் இம்முறை தொடரில் பங்குபற்றவுள்ளன.

இன்று ஆரம்பமாகவுள்ள இந்த தொடர் இம்மாதம் 23 ஆம் திகதி இறுதிப்போட்டியோடு நிறைவுக்கு வரவுள்ளது.


இந்த தொடரை பார்வையிட மைதான பார்வையாளர்கள் தொகையின் 50% சதவீதமானவர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானம், ஹம்பாந்தொட்டா மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஆகிய மைதானங்களில் இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன. 35,000 பேரை கொள்ளளவாகவே கொண்டுள்ள இந்த மைதானங்களில் அரை பகுதிக்கான பார்வையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படவுள்ளனர்.


இரண்டு தடுப்பூசிகளையும் பெற்று 14 நாட்களை பூர்த்தி செய்தவர்கள் மட்டுமே மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும், மைதானத்துக்கு தடுப்பூசி அட்டைகளை எடுத்து வருவது கட்டாயம் எனவும் இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

மைதான வாயில்கள் மற்றும் இலங்கை கிரிக்கெட் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை டிக்கெட்களை வாங்க முடியுமெனவும் இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

டிக்கெட்கள் 300, 1000,2000,3000,5000 ஆகிய விலைகளில் கிடைக்குமென அறிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் இணைய வழிமுறையிலும் டிக்கெட்களை பெற்றுக்கொள்ள முடியுமென அறிவித்துள்ளது.

LPL இன்று ஆரம்பம் - பார்வையாளர்கள் அனுமதி

Social Share

Leave a Reply