மின் பொறியாளர்களின் முக்கிய யோசனை

நாட்டில் மின்சார துண்டிப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்கு குறைந்த செலவிலான மின்னுற்பத்தி நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின் பொறியியலாளர்கள் சங்கம் யோசனை முன்வைத்துள்ளது.

கடந்த சில நாட்களாக நாட்டில் தொடர்ச்சியாக மின் வெட்டு இடம்பெற்றது. அந்தவகையில் கடந்த 3ஆம் திகதியும் மதிய வேளையில் ஒரு மணித்தியால மின் வெட்டு ஏற்பட்டது.

நுரைச்சோலையில் உள்ள மின்னுற்பத்தி நிலையத்தின் இரு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த மின் வெட்டு நிகழ்ந்ததாக மின்சக்தி அமைச்சு தெரிவித்தது.

ஆகவே இதனை சரி செய்து முடிக்க 4 நாட்கள் வரை செல்லும் என்பதால், நாடு பூராகவும் உள்ள பல்வேறு பிரதேசங்களில் மாலை 6 மணி தொடக்கம் இரவு 9.30 மணி வரையான காலப்பகுதியில் 4 நாட்களுக்கு ஒரு மணித்தியால மின் வெட்டு ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பிரதான மின்னுற்பத்தி நிலையம் ஒன்று செயலிழப்பதன் காரணமாகவே இவ்வாறான சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆகவே குறைந்த செலவிலான மின்னுற்பத்தி நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மின் பொறியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மின் பொறியாளர்களின் முக்கிய யோசனை

Social Share

Leave a Reply