மேலும் ஒருவர் பலி

திருகோணமலை மாவட்டம் – கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பகுதியில் கடந்த மாதம் இடம்பெற்ற மிதப்பு படகு விபத்தில் சிக்கி, சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற மிதப்பு படகு விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்த நிலையில், கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் நேற்றிரவு (04/12) உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய குறிஞ்சாக்கேணி மிதப்பு படகு விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் ஒருவர் பலி

Social Share

Leave a Reply