டெங்கு அதியுயர் அபாய வலயங்கள் அடையாளம்

இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 24,100 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

அதன்படி டெங்கு நோய் அவதானமிக்க அபாயகரமான வலயங்களாக கொழும்பு, வத்தளை, பிலியந்தலை, நுகேகொடை, தெஹிவளை, மஹரகம, கொதட்டுவ, பொரலஸ்கமுவ, இரத்மலானை, ராகமை, கண்டி, பூஜாபிட்டிய, பியகம மற்றும் பதுளை ஆகிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் 400 மில்லியன் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாக அண்மையில் மதிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய கொரோனா தொற்றுக்கு மத்தியில் டெங்கு நோயின் தீவிரத்தையும் உணர்ந்து மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

டெங்கு அதியுயர் அபாய வலயங்கள்  அடையாளம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version