9வது பாராளுமன்றத்தில் அதிகளவு பங்களிப்பு செய்த ஐவர்

9வது பாராளுமன்றத்தில் அதிகளவு பங்களிப்பு செய்த ஐவர்

இலங்கையின் 9வது பாராளுமன்றத்தில் அதிக பங்களிப்பு செய்தவர்களாக, முன்னாள் அரசாங்க மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஐந்து முக்கிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

2020ம் ஆண்டு ஒகஸ்ட் முதல் முறையாக கூட்டப்பட்ட 9வது பாராளுமன்றம், கடந்த செப்டெம்பர் மாதம் 24ம் திகதி நள்ளிரவுடன் கலைக்கப்பட்டது. இந்த காலப்பகுதியில் 390 பாராளுமன்ற அமர்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

இணையத்தளமொன்று நடத்திய ஆய்வின் அடிப்படையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் அமர்வுகளில் கலந்து கொண்ட நாட்களின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் அதிகளவில் பாராளுமன்றத்தில் பங்களிப்பு செய்த விடயப்பரப்பு ஆகியவற்றிற்கமைய, ஐந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் அதிகளவு பங்களிப்பு செய்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பின்வருமாறு:

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (ஐக்கிய மக்கள் சக்தி)
கலந்து கொண்ட பாராளுமன்ற அமர்வுகள் – 344
அதிகளவு பங்களிப்பு செய்த விடயப்பரப்பு – பொருளாதாரம் மற்றும் நிதி

முன்னாள் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன)
கலந்து கொண்ட பாராளுமன்ற அமர்வுகள் – 358
அதிகளவு பங்களிப்பு செய்த விடயப்பரப்பு – கல்வித்துறை

புத்திக பத்திரனே (ஐக்கிய மக்கள் சக்தி)
கலந்து கொண்ட பாராளுமன்ற அமர்வுகள் – 307
அதிகளவு பங்களிப்பு செய்த விடயப்பரப்பு – வர்த்தகம் மற்றும் தொழில் துறைகள்

லக்ஷ்மன் கிரியெல்ல (ஐக்கிய மக்கள் சக்தி)
கலந்து கொண்ட பாராளுமன்ற அமர்வுகள் – 383
அதிகளவு பங்களிப்பு செய்த விடயப்பரப்பு – பொருளாதாரம் மற்றும் நிதி

மஹிந்தானந்த அளுத்கமகே (ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன)
கலந்து கொண்ட பாராளுமன்ற அமர்வுகள் – 292
அதிகளவு பங்களிப்பு செய்த விடயப்பரப்பு – பொருளாதாரம் மற்றும் நிதி

Social Share

Leave a Reply