அந்நிய செலாவணிக்குப் பாதிப்பை ஏற்படுத்தாமல், வாகன இறக்குமதியை முறையான விதத்தில் அனுமதிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
வாகன இறக்குமதிக்கு அதிக தேவை இருப்பதாகவும், இன்று(15.10) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும், புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் அவசர வாகன இறக்குமதிக்கும் அல்லது சலுகை ரீதியான இறக்குமதிக்கும் அனுமதியளிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்நிய செலாவணிக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலும் மீண்டும் டொலர் நெருக்கடி ஏற்படாதவாறு முறையான திட்டத்தின் கீழ் வாகன இறக்குமதியை மேற்கொள்வது தொடர்பில் பரிசீலித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான முறையில் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருப்பதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.