புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மதிப்பீட்டுப் பணிகள் குறித்து வெளியான தகவல்

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு - மதிப்பீட்டுப் பணிகள் குறித்து வெளியான தகவல்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை மனித உரிமைகள் ஆணைக்குழு வழங்கும் பரிந்துரைகளின் பின்னர் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விடைத்தாள் மதிப்பீட்டிற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயார்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளின் சில கேள்விகள் கசிந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் புள்ளிகள் மற்றும் வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் நேற்று(15.10) அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply