கொவிட் 19 க்கான தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் பணக்கார நாடுகள் அல்லாத நாடுகளுக்கு உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அபுதாபியில் 5ஆவது இந்து சமுத்திர மாநாட்டின் தொடக்க உரையில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இந்த கோரிக்கையை விடுத்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஒமிக்ரொன் வைரஸ் திரிபின் பரவலுடன் தடுப்பூசியின் தேவை கடுமையாகி விட்டது என்றும் கோவெக்ஸ் திட்டத்தின் கீழ் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கிய அனைத்து நாடுகளுக்கும் நன்றிகளையும் தெரிவித்தார்.
அத்துடன் சில நாடுகள் இதுவரை போதியளவு தடுப்பூசிகளைப் பெறவில்லை எனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
