கொழும்பு, கிராண்ட்பாஸ் மாதம்பிட்டிய மயானத்திற்கு அருகாமையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவருடன் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கிராண்ட்பாஸ் மாதம்பிட்டிய மயானத்திற்கு அருகாமையில் நேற்று(16.10) பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
காரில் வந்த சிலர் முச்சக்கரவண்டியின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்திருந்தார்.
சம்பவத்தில் மிகிஜய செவன பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவரே உயிரிழந்தார்.
உயிரிழந்தவருடன், முச்சக்கரவண்டியில் மேலும் இரண்டு பேர் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும், குறித்த இருவருக்கும் இதன்போது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.