நுவரெலியா பிரதான பஸ்நிலையத்தில் அடையாளம் தெரியாத பெண்ணொருவரின் சடலம் இன்று (17.10)
கண்டுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 5 நாட்களுக்கு முன்பிலிருந்து உயிரிழந்த பெண்ணுடன் மற்றுமொரு பெண்ணும்
யாசகம் பெற்று வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதிக குளிர் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது
வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.