அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு

அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு

சந்தையில் தற்போது அரிசிக்குத் தட்டுப்பாடு நிலவுவதால் அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசிக்கான விலையை அதிகரித்துள்ளமையினால் சிறு மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்களும் விலையை அதிகரித்துள்ளனர்.

இதன்படி, சந்தையில் கீரி சம்பா தவிர்ந்த ஏனைய அரிசி வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது சந்தையில் ஒரு கிலோகிராம் அரிசி 210 ரூபாய் முதல் 230 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

Social Share

Leave a Reply