பாராளுமன்ற சர்ச்சை – விசாரணை குழு

பாராளுன்றத்தில் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஏற்பட்ட சர்ச்சைகளை விசாரிக்க விசாரணை குழு அமைக்கவுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேயவர்தன இன்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.


இன்று பாராளுமன்ற அமர்வு ஆரம்பித்த வேளையில் உரையாற்றிய சபாநாயகர் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்களடங்கிய விசாரணை குழுவொன்றை அமைத்து, நடைபெற்ற பிரச்சினைகள் தொடர்பில் விசாரணைகளை நடாத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.


கடந்த வெள்ளிக்கிழமை மாலை பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாரளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார உரையாற்றும் போது சர்ச்சைகள் ஏற்பட்டன. அதனை தொடர்ந்து அவரும்எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் அச்சுறுத்தப்பட்ட அதேவேளை, சபைக்கு வெளியே மனுஷ நாணயக்கார அச்சுறுத்தப்பட்டு தாக்குதலுக்கு முயற்சித்ததாக குற்றம் சுமதத்தப்பட்டுள்ளது.

இன்று காலை ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாராளுமன்ற சர்ச்சை - விசாரணை குழு

Social Share

Leave a Reply