650ஐ கடந்த தேர்தல் முறைப்பாடுகள்

650ஐ கடந்த தேர்தல் முறைப்பாடுகள்

எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 662 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 215 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 427 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

கடந்த 24 மணித்தியாலங்களில் 62 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், தேர்தல் குறித்த வன்முறைச் சம்பவமொன்றும் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

522 முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் கண்டறியப்பட்ட நிலையில், 140 முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

Social Share

Leave a Reply