முன்நாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, முன்நாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுனா மகேந்திரன் உப்பட்ட 10 பேர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
31 மார்ச் 2016 இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி தகவல்களை வெளியிட்டு, அரசாங்கத்துக்கு 15 பில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதொடர்பான 22 குற்றச்சாட்டுகளில் 11 இல் இருந்து இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில், ரவி கருணாநாயக்க, அர்ஜுனா மகேந்திரன், பேர்பெர்ஸ்சுவல் ட்ஷரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அலோசியஸ் மகேந்திரன் உப்பட்டவர்கள் மீது, பொது சொத்துக்கள் மோசடி சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
நடைபெற்ற வழக்கை இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள் குழு இந்த தீர்ப்பை அறிவித்துள்ளனர். எதிர்வரும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி குறித்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணைகள் நடைபெறவுள்ளன. அதன்போது மீதமுள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து குறிப்பிட்டவர்களை விடுதலை செய்வதா அல்லது அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைக்கு செல்வதா என்பது உயர் நீதிமன்றத்தில் அறிவிக்கப்படவுள்ளது.
