கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் தடம் புரண்டதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
கொம்பனிவீதி ரயில் நிலையத்தில் இன்று(28.10) காலை தடம் புரண்ட ரயிலை, கொண்டு செல்லும் போது மருதானைக்கு அருகில் மீண்டும் தடம் புரண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.