வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானம்

வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானம்

சில நடைமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இன்று (29.10) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

இந்த தீரமானத்திற்கு மத்திய வங்கியும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் சரியான முறைமை தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply