லொஹான் ரத்வத்த வைத்தியசாலையில் அனுமதி

லொஹான் ரத்வத்த வைத்தியசாலையில் அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திடீர் சுகவீனம் காரணமாக அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மிரிஹான பகுதியில் உள்ள அவரது மனைவியின் இல்லத்திலிருந்து இலக்கத் தகடு இல்லாத கார் ஒன்று மீட்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

நுகேகொடை – கங்கொடவில மேலதிக நீதவான் சஞ்சய லக்மால் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட
அவரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இதேவேளை, முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவியைக் கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Social Share

Leave a Reply