மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வகையில் வளிமண்டல நிலைமைகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் குறித்த திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.