பத்து மாவட்டங்களில் உள்ள நெல் மற்றும் அரிசி இருப்பு குறித்த கணக்கெடுப்பு இன்று முதல் ஆரம்பமானதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
நான்கு மாவட்டங்களின் நெல் மற்றும் அரிசி கையிருப்பு தொடர்பான அறிக்கைகள் ஏற்கனவே அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் ஹேமந்த சமரகோன் தெரிவித்துள்ளார்.
அடையாளம் காணப்பட்ட மாவட்டங்களில் உள்ள நெல் மற்றும் அரிசி இருப்புக்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.