அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்று வாக்கு எண்ணும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட ட்ரம்ப்
இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
ஒக்லஹோமா, மிசௌரி, இண்டியானா, கென்டக்கி, டென்னஸ்ஸி, அலபாமா, ஃபுளோரிடா, மேற்கு விர்ஜினியா உள்ளிட்ட மாகாணங்களில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அவர் இதுவரை 247 தேர்தல் கல்லூரி வாக்குகளைப் பெற்றுள்ளார்.
கமலா ஹாரிஸைப் பொருத்தவரை, கலிபோர்னியா, ஒரேகான், வாஷிங்டன், நியூயார்க், வெர்மான்ட், நியூ ஹாம்ப்ஷயர், மசாசூசெட்ஸ், மேரிலேன்ட், ஓரிகன், இல்லினாய்ஸ், டிஸ்ட்ரிக்ட் ஆஃப் கொலம்பியா உள்ளிட்ட மாகாணங்களை வசப்படுத்தியுள்ள அவர் இதுவரை 210 தேர்வாளர் குழு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேர்தல் கல்லூரி (Electoral college) என்பது மாகாண வாக்குகளை வழங்குவதற்கு பொறுப்பான உறுப்பினர்களின் ஒரு குழுவைக் குறிக்கிறது. அவர்கள் ‘தேர்வாளர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள்.
அமெரிக்காவின் 50 மாகாணங்களில் ஒன்றில் வெற்றி பெறுவதென்பது, அந்த மாகாணத்தின் ‘தேர்தல் கல்லூரி’ வாக்குகள் எனப்படும் அனைத்து வாக்குகளையும் ஓர் வேட்பாளர் பெறுவதாகும்.
மொத்தம் 538 தேர்தல் கல்லூரி வாக்குகள் உள்ள நிலையில் வேட்பாளர் ஒருவர் வெற்றி பெறுவதற்கு பெரும்பான்மையான 270 அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குகளை பெற வேண்டும்.