அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என ஃபாக்ஸ் நியூஸ் அறிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் முக்கிய மாகாணங்களிலிருந்து அடுத்தடுத்து வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி வருகின்றன
ஒக்லஹோமா, மிசௌரி, இண்டியானா, கென்டக்கி, டென்னஸ்ஸி, அலபாமா, ஃபுளோரிடா, மேற்கு விர்ஜினியா உள்ளிட்ட மாகாணங்களில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அவர் இதுவரை 266 தேர்தல் கல்லூரி (Electoral college) வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மொத்தமுள்ள 538 தேர்தல் கல்லூரிகளில் 270 அல்லது அதற்கும் அதிகமான வாக்குகளைப் பெறுபவர் வெற்றி பெறுவார்.
இந்நிலையில் ட்ரம்பின் வெற்றி ஏறக்குறைய உறுதியாகி விட்டது. புளோரிடாவில் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.
அமெரிக்கா எங்களுக்கு முன்னோடியில்லாத மற்றும் சக்திவாய்ந்த ஆணையை வழங்கியுள்ளது என அவர் மக்களிடம் தெரிவித்தார்.
கலிபோர்னியா, ஒரேகான், வாஷிங்டன், நியூயார்க், வெர்மான்ட், நியூ ஹாம்ப்ஷயர், மசாசூசெட்ஸ், மேரிலேன்ட், ஓரிகன், இல்லினாய்ஸ், டிஸ்ட்ரிக்ட் ஆஃப் கொலம்பியா உள்ளிட்ட மாகாணங்களை வசப்படுத்தியுள்ள கமலா ஹாரிஸ் 194 தேர்தல் கல்லூரி வாக்குகளைப் பெற்றுள்ளார்.