பொதுத் தேர்தல் – வாக்களிக்க விடுமுறை வழங்காமை குறித்து முறைப்பாடு

பொதுத் தேர்தல் - வாக்களிக்க விடுமுறை வழங்காமை குறித்து முறைப்பாடு

பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக அரச மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு போதுமான விடுமுறை வழங்கப்படவில்லை என முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

1981 ஆம் ஆண்டு முதலாமிலக்க தேர்தல் சட்டத்தின் 122 ஆவது சரத்திற்கமைய வாக்களிப்பதற்கு ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சம்பளம், தனிப்பட்ட விடுமுறை இழப்பின்றி ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

வாக்களிப்பதற்கு விடுமுறை வழங்குமாறு எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் கட்டாயம் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விசேட விடுமுறையாக கருத வேண்டும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply