மக்களின் எதிர்ப்பால் மீண்டும் முறியடிக்கப்பட்ட கனியவள மணல் அகழ்வு முயற்சி

மக்களின் எதிர்ப்பால் மீண்டும் முறியடிக்கப்பட்ட கனியவள மணல் அகழ்வு முயற்சி

கனியவள மணல் அகழ்வுக்காக ஓலைத்தொடுவாய் கிராமப் பகுதியில் சுற்று சூழல் தாக்கம் தொடர்பாக மதிப்பீட்டு அறிக்கை மேற்கொள்ளும் நோக்குடன் கொழும்பிலிருந்து வருகை தந்த அதிகாரிகளை இப்பகுதி மக்களும் பொது அமைப்புக்ளும் குறிப்பிட்ட இடத்துக்குச் செல்ல அனுமதிக்காது நேற்றைய தினம் (06.11) வியாழன் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவு பெற்று பணியைத் தொடர பொலிஸார் எடுத்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

குறித்த பகுயில் மக்களின் நீண்டகால எதிர்ப்புக்கு மத்தியிலும் கனியவள மணல் அகழ்வுக்கான நடவடிக்கைக்காக.அதிகாரிகள் வருகை தரவிருப்பதை அறிந்த மக்களும் பொது அமைப்புக்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அதிகாரிகள் அவ்விடத்துக்கு கனியவள மணல் அகழ்வு செய்யும் முகவருடனும் பொலிஸ் உயர் பாதுகாப்புடனும் வருகை தந்திருந்த நிலையில் பொது மக்கள் பாதைகளால் மறித்து அவர்களை செல்ல விடாது தடுத்தனர்.

இதன் போது பொதுமக்கள் , அரசியல்வாதிகள் , பொது அமைப்புக்களைச் சார்ந்தவர்கள் மற்றும் மதத் தலைவர்கள் இணைந்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் அனுமதி பெற்று கனியவள மணல் அகழ்வுக்கான நடவடிக்கைக்காக கடற்கரையோரப் பகுதியில் சுற்று சூழல் தாக்கம் தொடர்பாக மதிப்பீட்டு அறிக்கை சமர்பிக்க நீதிமன்ற அனுமதியைக் கோரியிருந்தனர்.

மக்களின் எதிர்ப்பால் மீண்டும் முறியடிக்கப்பட்ட கனியவள மணல் அகழ்வு முயற்சி

மக்கள் சார்பில் சட்டத்தரணிகள் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த நிலையில் பொலிஸாரும் தாக்கல் செய்த மனுவை மீளப்பெற்றதால், தொடர்ந்தும் மதீப்பீடு செய்யும் நடவடிக்கை நீதிமன்றத்தால் நிறுத்தப்பட்டுள்ளது.

எனினும் இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன்
தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மக்கள் மத்தியில் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது..

மக்களின் எதிர்ப்பால் மீண்டும் முறியடிக்கப்பட்ட கனியவள மணல் அகழ்வு முயற்சி

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply