வடக்கு மக்களின் காணிகள் மீண்டும் அவர்களுக்கே விடுவிக்கப்படும் – ஜனாதிபதி

வடக்கு மக்களின் காணிகள் மீண்டும் அவர்களுக்கே விடுவிக்கப்படும் - ஜனாதிபதி

பல்வேறு பாதுகாப்பு காரணங்களுக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள வடக்கு மக்களின் காணிகள் மீண்டும் அவர்களுக்கே விடுவிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10.11) தேசிய மக்கள் சக்தியின் பிரசார கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

வடக்கின் மீன்பிடித் தொழிலைப் பாதுகாப்பதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும்.
வரவு செலவுத் திட்டத்தில் மீனவர்களுக்கு எரிபொருள் மானியம் வழங்குவதற்கும் தீர்மானித்துள்ளோம்.

சட்டமா அதிபரின் பணிப்புரைக்கு அமைய அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள்.

பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக தற்போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் வந்தாரா? முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா யாழ்ப்பாணம் வந்தாரா?

நாம் வந்தோம். தேர்தலை வெற்றி கொள்ள மட்டும் எமக்கு யாழ்ப்பாணம் தேவை இல்லை. யுத்தம் இல்லாத நாட்டை உருவாக்கவும் இந்த நாட்டை கட்டியெழுப்பவும் யாழ்ப்பாணம் தேவை” என்றார்.

Social Share

Leave a Reply