வரலாறு படைத்த விஜித ஹேரத்

வரலாறு படைத்த விஜித ஹேரத்

பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியிலிருந்து கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட அமைச்சர் விஜித ஹேரத் 716,715 விருப்பு வாக்குகளைப் பெற்று கம்பஹா மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

இந்த எண்ணிக்கையான வாக்குகள் இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் வரலாற்றில் வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிகூடிய வாக்குகளாகும்.

இதேவேளை இந்த தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 655,289 வாக்குகளை பெற்று இதற்கு முன்னதாக அதிக விருப்பு வாக்குகளை பெற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சாதனையை முறியடித்துள்ளார்.

Social Share

Leave a Reply