புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கிறது

புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கிறது

புதிய அமைச்சரவை இன்று (18) காலை 10 மணிக்கு பதவியேற்கவுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த பதவியேற்பு நடைபெறவுள்ளது.

அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களும் இதன்போது பதவியேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

10ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது சபை அமர்வு எதிர்வரும் 21ஆம் திகதி காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.

175 இற்கும் அதிகமான புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

இம்முறை தெரிவாகியுள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும் அவர்களது தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கான விசேட கருமபீடமொன்று பாராளுமன்றத்தில் நிறுவப்படும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் குறித்த கருமபீடத்தின் ஊடான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

Social Share

Leave a Reply