அரசியல் தீர்வு தொடர்பாக இந்தியா வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை

அரசியல் தீர்வு தொடர்பாக இந்தியா வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை

இலங்கைத் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், இந்திய உயர் ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு நேற்றையதினம் இடம்பெற்றது.

இதன்போது அரசியல் தீர்வு தொடர்பாக இந்தியா வலியுறுத்த வேண்டும் எனவும் மாகாண சபைத் தேர்தல் உடன் உடன் நடாத்தப்பட வேண்டுமென்பது தொடர்பிலும் வலியுறுத்தப்பட்டது.

மேலும் தமிழர் தேசத்தில் நடைபெறும் பிரச்சனைகளை ஆவணப்படுத்துவதற்கு தீர்மானமெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் ஆவணம் தயாரிக்கப்பட்டதன் பின்னர் இந்திய உயர் ஸ்தானிகரிடம் ஒப்படைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மக்களின் அபிவிருத்தி தொடர்பிலும், மீனவர்களின் பிரச்சனைகள் குறித்தும் இங்கு முக்கியமாக கலந்துரையாடப்பட்டது.

Social Share

Leave a Reply