நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நவம்பர் 27,28 மற்றும் 29ஆம் திகதிகளில் உயர்தரப் பரீட்சை இடம்பெறாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள பரீட்சைகள் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
மேற்படி பரீட்சைகள் டிசம்பர் மாதம் 21, 22 மற்றும் 23ஆம் திகதிகளில் இடம்பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.