நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 26 வெளிநாட்டவர்கள் குடிவரவு மற்றும்
குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று (26.11) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு, கிருலப்பனை பகுதியில் தற்காலிகமாக விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 16 பங்களாதேஷ் பிரஜைகளும், 2 பாகிஸ்தான் பிரஜைகளும், 2 புருண்டி பிரஜைகளும் இந்தியா,
பிலிப்பைன்ஸ், உகண்டா, எத்தியோப்பியா, கென்யா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒவ்வொருவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.