தமிழ் மக்களுக்கு 107 என்ற விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
சீரற்ற வானிலையால் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்த தகவல்களை வழங்க முடியும் என்பதுடன் இந்த இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துவதனூடாக உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இதேவேளை, நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 17 மாவட்டங்களில் 59,629 குடும்பங்களைச் சேர்ந்த 207,582 பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளதுடன் ஏழு பேர் காணாமற்போயுள்ளனர். மேலும் எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை, 3,102 குடும்பங்களைச் சேர்ந்த 10,137 பேர் தற்போது 104 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.