கொழும்பின் இந்துக்கல்லூரி-விவேகானந்த கல்லூரி இணைந்து நிவாரண சேகரிப்பு

வடக்கிலும் கிழக்கிலும் பெய்து வரும் கடும் மழையினால் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. ஏராளாமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை தொடர்ந்தும் பெய்து வருவதனால், குளங்கள் உடைப்பெடுத்து வருவதனாலும் மக்கள் வீடுகளை இழந்து பொது இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். உணவின்றி கஷ்டப்படுகின்றனர். இந்த நிலையில் கொழும்பின் முன்னணி தமிழ் பாடசாலைகளான பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி, கொட்டஞ்சேனை விவேகானந்த இந்துக்கல்லாரி பழைய மாணவர்கள் சங்கங்கள் இணைந்து நிவாரண பொருட்களை சேகரிக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

230,000 இற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உடனடியாக இந்த உதவிகளை மக்களுக்கு வழங்கு தங்களுடன் கைகோர்க்குமாறு இரு பாடசாலைகளினதும் பழைய மாணவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தேவையான பொருட்கள்
உடனடி/துரித உணவுப்பொருட்கள் – பிஸ்கேட்ஸ், நூடில்ஸ், உடனே சாப்பிடக்கூடிய உலர் உணவுப்பொருட்கள்
குழந்தைகளுக்கான பொருட்கள் – பால்மா, குழந்தைகளுக்கான உலர் உணவுப்பொருட்கள், டயப்பேர்ஸ், வைப்ஸ்
துவாய், போர்வைகள்
சவர்க்காரம், பற்பசை, பற்தூரிகை(Tooth Brush)
பெண்களுக்கான டயப்பேர்ஸ் மற்றும் பெரியவர்களுக்கான டயப்பேர்ஸ்
தோற்று நீக்கிகள்
முதலுவதி பொருட்கள் மற்றும் அத்தியாவசிய மருந்துகள்
நுளம்பு வலைகள், நுளம்பு எதிர்ப்பு பொருட்கள்

பொருட்கள் சேகரிக்கப்படும் இடங்கள்
இந்துக்கல்லூரி – கொழும்பு 04
விவேகானந்த கல்லூரி – கொழும்பு 13

மிக விரைவாகவும், உண்டானடியாகவும் இந்த பொருட்களை வழங்க வேண்டியுள்ளமையினால் விரைந்து பொருட்களை வழங்குமாறு குறித்த பழைய மாணவர் சங்கங்கள் கேட்டுக்கொள்கின்றன.

Social Share

Leave a Reply