இலங்கை, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று தென்னபிரிக்கா அணிகளுக்கிடையில் டேர்பனில் ஆரம்பித்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீச தென்னாபிரிக்கா அணியின் துடுப்பாட்ட வீரர்கள் தடுமாறினார்கள். ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் வேகமாக ஆட்டமிழந்தனர். ரெம்பா பவுமா நிதானமாக துடுப்பாடி வருகிறார். ஆட்டமிழக்காமல் 28 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். உபாதையிலிருந்து மீண்டு வந்து துடுப்பாடி வருகிறார். ரிஸ்டன் ஸ்டப்ஸ் 16 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் லஹிரு குமார 2 விக்கெட்களையும், அசித்த பெர்னான்டோ, விஸ்வ பெர்னாண்டோ ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றிக்கொண்டார்கள்.