சீரற்ற காலநிலையால் வவுனியாவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

சீரற்ற காலநிலையால் வவுனியாவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா மாவட்டத்தில் இடம்பெயர்ந்த 125 குடும்பங்களைச் சேர்ந்த 363 பேர் பாதுகாப்பான மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு சமைத்த உணவு உட்பட சகல நலன்புரி வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்திர கூறுகிறார்.

சீரற்ற காலநிலையால் வவுனியா மாவட்டத்தில் மேலும் 775 குடும்பங்களைச் சேர்ந்த 2709 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்றிரவு (27.11) பாதுகாப்பு மையங்களுக்கு மாவட்ட செயலாளர் நேரில் சென்று மக்களை பார்வையிட்டார்.

Social Share

Leave a Reply