முல்லைத்தீவில் விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

முல்லைத்தீவில் விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடர்பாக ஆராய்வதற்கான விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை 9.30 இற்கு நடைபெற்றது.

இந்த கூட்டம் கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை பாதிப்புக்கள் தொடர்பாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிசாட் பதியூதீன், காதர்மஸ்தான், ம.ஜெகதீஸ்வரன், து.ரவிகரன், செ.திலகநாதன், ப.சத்தியலிங்கம் மற்றும் அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன், பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள், நீர்ப்பாசன அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர்,மின்சாரசபை பொறியியலாளர், பிராந்திய சுகாதாரசேவைகள் பணிமனை வைத்தியர், வலயக் கல்விப்பணிப்பாளர்கள், பொலிஸார், இராணுவத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply