சாருஜன், நியூட்டன், மாதுளன் கலக்கல். 19 வயது இலங்கை அணி வெற்றி

சாருஜன், நியூட்டன், மாதுளன் கலக்கல். 19 வயது இலங்கை அணி வெற்றி

இன்று 19வயதுக்குட்பட்ட ஆசியக்கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பித்துள்ளது. இரண்டாவது போட்டியாக குழு B இற்கான போட்டியில் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியும், நேபாளம் 19 வயதுக்குட்பட்ட அணியும் மோதின. இந்தப் போட்டியில் இலங்கை அணி 55 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி சார்பாக சாருஜன் சண்முகநாதன் துடுப்பாட்டத்தில் கூடுதலான ஓட்டங்களை பெற்று போட்டியின் நாயகன் விருதை வென்றார். இந்த அணியில் விளையாடிய ஏனைய இரண்டு தமிழ் வீரர்களான நியூட்டன் மற்றும் மாதுளன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றி இலங்கை அணியின் வெற்றியில் பங்களிப்பு செய்தனர். சாருஜன் மூன்றாமிலக்கத்தில் துடுப்பாடி 62 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். நியூட்டன் ஆரம்ப பந்துவீச்சாளராக பந்துவீசியிருந்தார்.

முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 233 ஓட்டங்களை பெற்றது. லக்வின் அபேயசிங்க 50 ஓட்டங்களையும், கவிஜா கமகே ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்களையும் பெற்றனர். நேபாளம் அணியின் பந்துவீச்சில் சந்தோஷ் யாதவ் 4 விக்கெட்களை கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பாடிய நேபாளம் 19 வயதுக்குட்பட்ட அணி 46.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 178 ஓட்டங்களை பெற்றது. மாயன் யாதவ் 62 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இலங்கை அணியின் பந்துவீச்சில் பிரவீன் மனீஷா 9 ஓவர்களிகள் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை கைப்பற்றினார். ரஞ்சித்குமார் நியூட்டன் 6.2 ஓவர்களில் 17 ஓட்டங்களை வழங்கி 2 விக்கெட்களை கைப்பற்றினார். குகதாஸ் மாதுளன் 6 ஓவர்களில் 21 ஓட்டங்களை வழங்கி 2 விக்கெட்களை கைப்பற்ற, விகாஸ் தெவ்மிகா பி ஓவர்களில் 51 ஓட்டங்களை வழங்கி 2 விக்கெட்ளை கைப்பற்றினார்.

Social Share

Leave a Reply