சிங்கப்பெண்ணே – சாதனை படைக்கும் ஆடை தொழிற்சாலை பெண்கள்

பெண்கள் வேலை செய்வது என்பதும் சொந்தக்காலில் நிற்பது என்பதும் அந்தக்காலம் . இப்போதெல்லாம் பெண்களும் அடித்து தூக்குகிறார்கள். அதிலும் ஆடை தொழிற்சாலைகளில் தொழில் புரியும் பெண்கள் தங்கள் சொந்தக்காலில் நிற்கிறார்கள்.
வேலைக்கு ஏற்ற நல்ல சம்பளம் வழங்கப்படுகிறது. படிப்படியான வளர்ச்சிகளை பெற முடியும். ஆரம்ப கட்டத்திலேயே இருக்க வேண்டுமென்ற நிலையில்லை. பதவி உயர்வுகள், சம்பள அதிகரிப்புகள், பயிற்சிகள் என அவர்களது வாழ்க்கை செழிப்படைய ஏராளமான வழிகளுண்டு.

சிங்கப்பெண்ணே - சாதனை படைக்கும் ஆடை தொழிற்சாலை பெண்கள்

எதிர்மறை கருத்துக்களை முன் வைப்பவர்கள் வைத்துக்கொண்டேதான் இருப்பார்கள். அவற்றை தூக்கி எறிந்துவிட்டு முன்னேறும் வழியினை பார்ப்பவர்கள் முன்னேறுவார்கள்.

பிறர் கூறும் அவதூறு கருத்துக்கள் ஆடை தொழிற்சாலைகளில் மட்டுமல்ல சமூகத்தில் பல இடங்களிலும் நிறைந்து கிடக்கிறது.
வேலை செய்யும் இடங்களை சென்று பார்க்கும் போது, செவி வழியாக பரவும் கருத்துக்களும், உண்மை நிலை வேறு என்பது தெளிவாக புலப்படும்.
வவுனியா, ஒமேகா லைன் ஆடை தொழிற்சாலையின் பெண் தொழிலாளர் ஒருவர் தனது நிலையும், தனது முன்னேற்றம் தொடர்பிலும் கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply