முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் எம்.பி பதவிப்பிரமாணம்

முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் எம்.பி பதவிப்பிரமாணம்

முஸ்லிம் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய பட்டியலில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட எஸ். எம். நளீம் சபாநாயகர் அசோக ரன்வல முன்னிலையில் இன்று (03.11) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 87,038 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை வென்றது.

இதன்படி, கட்சிக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்று கிடைத்துள்ளதுடன், அந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு இவரை நியமிக்க கட்சி தீர்மானித்திருந்தது.

இவர் இதற்கு முன்பு ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளராகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply