கண்டி ரயில் நிலையத்தில் ரயிலில் மோதி ஊழியர் ஒருவர் இன்று (03.12) உயிரிழந்துள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர்
ரயில்வே திணைக்களத்தில் பணிப் பரிசோதகராகப் பணிபுரிந்த 58 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பேராதனையில் இருந்து கொழும்பு கண்டி எக்ஸ்பிரஸ் ரயில் வருகையின் போது தேநீர் அருந்துவதற்காக ரயில் நிலையத்தின் சிற்றுண்டிச்சாலைக்கு சென்று கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மற்றுமொரு ரயில் பாதைக்கு மாறியபோது, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த ரயில் ஊழியர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.