இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இன்று(03.12) 19 வயதிற்குட்பட்ட ஆசியக்கிண்ணத்தின் 9 ஆவது போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணி 7 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தோல்விகளின்றி அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 49.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 228 ஓட்டங்களை பெற்றது. இதில் விமத் தின்சர 106 ஓட்டங்களையும், விஹாஸ் தெவ்மிக்க 22 ஓட்டங்களையும், விரான் சமுதித்த 20 ஓட்டங்களையும் பெற்றனர்.
பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் அல் பஹாத் 4 விக்கெட்களையும், ரிஸான் ஹொசைன் 3 விக்கெட்களையும், இக்பல் ஹொசைன் எமொன், MD உஸ்ஸமன் ரபி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 221 ஓட்டங்களை பெற்றது. இதில் கலாம் சித்திக்கி 95 ஓட்டங்களையும், தெபசிஸ் தெபா 31 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் விஹாஸ் தெவ்மிக்க 3 விக்கெட்களையும், விரான் சமுதித, பிரவீன் மனீஷ, குகதாஸ் மாதுளன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.