அஸ்வெசும கொடுப்பனவை இரண்டு கட்டங்களாக நீடிக்க அமைச்சரவை அனுமதி

அஸ்வெசும கொடுப்பனவை இரண்டு கட்டங்களாக நீடிக்க அமைச்சரவை அனுமதி

பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவை இரண்டு கட்டங்களாக நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும்
அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி முடிவடையவிருந்த 400,000 பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கான நலன்புரி நன்மைகள் மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி முடிவடையவிருந்த மேலும் 400,000 பயனாளிகளுக்கான நலன்புரி நன்மைகள் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அதேநேரம், வறியவர்களுக்கு வழங்கப்படும் 8,500 ரூபா கொடுப்பனவை 10,000 ரூபாவாகவும், மிகவும் வறிய குடும்பங்களுக்கு வழங்கப்படும் 15,000 ரூபா கொடுப்பனவை 17,500 ரூபாவாகவும் அதிகரிப்பதற்கும் முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Social Share

Leave a Reply