கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை (03.12) முதல் மீள ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அனர்த்த நிலைமைகளால் உயர்தரப் பரீட்சை இரண்டு சந்தர்ப்பங்களில் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று முதல் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள
கால அட்டவணைக்கு அமைய பரீட்சை நடத்தப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளை எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பரீட்சை நிலையத்திற்கு செல்வதில் சிரமத்தை எதிர்கொண்டுள்ள பரீட்சார்த்திகளுக்கு அருகிலுள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சை எழுதுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.