ரிஷியுதன் இரண்டாவது தடவை 8 விக்கெட்கள்

ரிஷியுதன் இரண்டாவது தடவை 8 விக்கெட்கள்

கடந்த வருடம் பாடசாலை அணிகளுக்குட்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் 13 வயதுக்குட்பட்ட மூன்றாம் பிரிவில் ஓட்டங்களை வழங்காது 8 விக்கெட்களை கைப்பற்றி சாதனை படைத்த செல்வசேகரம் ரிஷியுதன் இந்த முறையும் 8 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். மருதானை சென்ட் ஜேஸப் கல்லூரிக்காக விளையாடும் இவர், மஹாமத்திய வித்தியாலயம் அணிக்கெதிராக 17 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய கிருலப்பன மஹாமத்திய வித்தியாலயம் 34 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. சென்ட் ஜேஸப் கல்லூரி அணி சார்பாக பந்துவீச்சில் H. M. D.D. A.ஜயசிங்க 6 விக்கெட்களை கைப்பற்றினார். சென்ட் ஜேஸப் கல்லூரி துடுப்பாட்டத்தில் 4 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்களை பெற்று துடுப்பாட்டத்தை இடை நிறுத்தியது. இதில் G. A. Y. M. சில்வா ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். K. V. T. A. M. சொய்ஷா ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இரண்டாவது இன்னிங்சில் மஹாமத்திய வித்தியாலயம் சகல விக்கெட்களையும் இழந்து 30 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இந்த இன்னிங்சில் ரிஷியுதன் 17 ஓட்டங்களை வழங்கி 8 விக்கெட்ளை கைப்பற்றிக்கொண்டார்.

கடந்த வருடம் பம்பலபிட்டிய இந்துக்கல்லூரி அணிக்காக விளையாடி ஓட்டங்களின்றி 8 விக்கெட்ளை கைப்பற்றி சாதனை படைத்த நிலையில், இவர் மருதானை சென்ட் ஜோசப் கல்லூரிக்கு அழைக்கப்பட்டிருந்தார். இந்த வருடமும் 8 விக்கெட்களை கைப்பற்றி தனது பெறுபேற்றினை சிறப்பாக வெளிக்காட்டியுள்ளார்.

Social Share

Leave a Reply