அரிசிக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என எச்சரிக்கை

அரிசிக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என எச்சரிக்கை

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், அரிசிக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நீண்டகால வேலைத்திட்டத்தை தயாரிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அதன் தலைவர் யு. கே. சேமசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

“நாம் நீண்ட கால தீர்விற்கு செல்ல வேண்டும், இல்லை என்றால், மீண்டும் மீண்டும் இந்த நெருக்கடிக்கு ஏற்படும்.
சிறு போகத்தில் நெல் கொள்முதல் செய்ய, நெல் சந்தைப்படுத்தல் சபை இந்த நெருக்கடியை தீர்க்க முறையான
திட்டத்தை தயாரிக்க வேண்டும்.

மேலும், அரசாங்கம் குறுகிய கால தீர்வாக வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்யாவிட்டால், இந்த நிலையில் சந்தையில் அரிசிக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படலாம்” என்றார்.

Social Share

Leave a Reply