பிணையில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர், மது போதையில் கைது

பிணையில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர், மது போதையில் கைது

நேற்று(05.12) நீதிமன்ற பிணையில் விடுதலையான முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தை நேற்று இரவு கொள்ளுப்பிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் டிபண்டர் ரக வாகனத்தை ஒட்டி, கொள்ளுப்பிட்டி பகுதியில் பிறிதொரு காருடன் மோதி விபத்தை ஏற்படுத்திய நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதி சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்து, அதனை மாற்றியமைத்து பாவித்தமை தொடர்பில் லொஹான் ரத்வத்தை மற்றும் அவரது மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டு, நேற்றைய தினம் நீதிமன்ற பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

Social Share

Leave a Reply