இலங்கை அணியால் வெல்ல முடியுமா?

இலங்கை அணியால் வெல்ல முடியுமா?

இலங்கை, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் இன்று(08.12) நிறைவுக்கு வந்துள்ளது. 328 ஓட்டங்கள் என்ற கடின இலக்கை நோக்கி இலங்கை அணி துடுப்பாடி வருகின்றது. இன்னமும் வெற்றி பெற இலங்கை அணிக்கு 143 ஓட்டங்கள் தேவை. பெற முடியுமென்ற நிலைதான். ஆனால் கையில் விக்கெட்கள் இல்லை என்பதே இலங்கைக்கு கடினமான நிலை. இறுதி துடுப்பாட்ட ஜோடியான தனஞ்சய டி சில்வா மற்றும் குஷல் மென்டிஸ் ஆகியோர் தற்போது துடுப்பாடி வருகின்றனர். இதற்கு பின்னர் துடுப்பாட போராட துடுப்பாட்ட வீரர்கள் இல்லை என்பதும் தென்னாபிரிக்கா வேகப் பந்துவீச்சாளர்களை எதிகொள்வதும்தான் இலங்கை அணிக்கான சிக்கல். இந்த ஜோடி நாளை இறுதி நாளில் சிறப்பாக செயற்பட்டால் வெற்றி பெற முடியாது என்பதும் இல்லை.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி முதல் இன்னிங்சில் சகல விக்கெட்களையும் இழந்து 358 ஓட்டங்களை பெற்றது. ஆரம்பத்தில் இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு தடுமாறிய தென்னாபிரிக்கா அணி மத்திய வரிசையில் சிறப்பாக துடுப்பாடி பலமான நிலையை அடைந்தது. அத்தோடு பின் வரிசை துடுப்பாட்ட வீரர்களும் சிறப்பாக துடுப்பாடி ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார்.
தென்னாபிரிக்கா அணியின் துடுப்பாட்டத்தில் ரையான் ரிக்கெல்டன், ரெம்பா பவுமா ஆகியோர் இணைந்து 133 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். இந்த இணைப்பாட்டம் மூலமாக தென்னாபிரிக்கா அணி மீள் வருகையினை மேற்கொண்டது. ரையான் ரிக்கெல்டன் 101 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். ரெம்பா பவுமா 78 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். கைல் வெரைனா ஆட்டமிழக்காமல் 105 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இலங்கை அணியின் பந்துவீச்சில் லஹிரு குமாரா 4 விக்கெட்களையும், அசித்த பெர்னாண்டோ 3 விக்கெட்களையும், விஸ்வ பெர்னாண்டோ 2 விக்கெட்களையும், பிரபாத் ஜெயசூர்யா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி தமது முதல் இன்னின்னிங்சில் 338 ஓட்டங்களை பெற்றது. டினேஷ் சந்திமால், பத்தும் நிஸ்ஸங்க ஆகியோர் சத இணைப்பாட்டத்தை பூர்த்தி செய்தனர். 109 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். பத்தும் நிஸ்ஸங்க 89 ஓட்டங்களை பெற்றார். டினேஷ் சந்திமால் 44 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். அஞ்சலோ மத்தியூஸ் 44 ஓட்டங்களையும், கமிந்து மென்டிஸ் 48 ஓட்டங்களையும் பெற்றனர். டிமுத் கருணாரட்ன 20 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பிரபாத் ஜெயசூர்யா 24 ஓட்டங்கள். தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில் டேன் பட்டர்சன் 5 விக்கெட்களையும், மார்கோ ஜன்சன், கேஷவ் மஹாராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

தென்னாபிரிக்கா அணி இரண்டாம் இன்னிங்சில் 3 விக்கெட்களை இழந்து 193 ஓட்டங்கள் என்ற நிலையில் இன்று துடுப்பாட்டத்தை தொடர்ந்து. 317 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. இதில் எய்டன் மார்க்ராம் 55 ஓட்டங்களையும், ரெம்பா பவுமா 66 ஓட்டங்களையும், ரிஸ்டன் ஸ்ட்ரப்ஸ் 47 ஓட்டங்களையும் பெற்னர். இலங்கை அணியின் பந்துவீச்சில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்களையும், விஸ்வ பெர்னாண்டோ 2 விக்கெட்டையும் கைப்பற்றினார்கள். லஹிரு குமார, அசித்த பெர்னாண்டோ ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடி வரும் இலங்கை அணி 5 விக்கெட்களை இழந்து 205 ஓட்டங்களை பெற்றுள்ளது. தனஞ்சய டி சில்வா மற்றும் குஷல் மென்டிஸ் ஆகியோர் ஆட்டமிழக்கமால் தலா 39 ஓட்டங்களை பெற்றுள்ளனர். கமிந்து மென்டிஸ் 35 ஓட்டங்களையும், அஞ்சலோ மத்தியூஸ் 32 ஓட்டங்களையும், டினேஷ் சந்திமால் 29 ஓட்டங்களையும் பெற்றனர். தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில் கேஷவ் மஹாராஜ், டான் பட்டர்சன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றியுள்ளனர்.

Social Share

Leave a Reply