”2028ம் ஆண்டு ஓர் ஒலிம்பிக் ஆண்டு”- விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்!

விளையாட்டின் மூலம் பல முன்னேற்றங்களை காணக்கூடிய எமது எமது நாட்டில், அதனை சிறப்புற உருவாக்கும் தேசிய பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை வில்வித்தை சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சம்பியன்ஷிப் போட்டிகள் 03 நாட்கள் கொலன்னாவ உமகுலியா விளையாட்டரங்கில் இடம்பெற்றதுடன், இதில் பத்து விளையாட்டுக் கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 29 நிகழ்வுகளில் 311 வீராங்கனைகள் பங்குபற்றினர்.

இதன்போது விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன தலைமையில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

அந்நிகழ்வில் கருத்து தெரிவித்த அமைச்சர். விளையாட்டில் இருந்து தற்போது அரசியல் முற்றிலும் நீக்கப்பட்ட்டுள்ளதாகவும், அனைத்து விளையாட்டுகளையும் ஒலிம்பிக்கில் கொண்டு வருவதற்கான திட்டங்கள் 2025 ஜனவரி முதல் வாரத்தில் ஆரம்பிக்கவுள்ளதாகவும், நாட்டில் விளையாட்டு பிரிவு பின்னிலையை அடைவதை அனுமதிக்க முடியாது எனவும், விளையாட்டுக் கழகங்களில் உள்ள பிரச்னைகளை விரைவில் தீர்க்க தாம் முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தானும் விளையாட்டு வீரராக இருந்தபோது இவ்வாறான கதைகளைக் கேட்டுள்ளதாகவும், இனி அந்தக் கதைகளை உண்மையாக்கி விளையாட்டின் மறுமலர்ச்சி சகாப்தத்தைத் தொடங்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

வில்வித்தை போன்று நமது நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டுகளையும் சர்வதேச வெற்றிக்கு கொண்டு செல்லும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது. 2028 ஆம் ஆண்டை ஓர் ஒலிம்பிக் வருடமாக மாற்றி , அழகான நாடு வளமான நாடு கருப்பொருளை உண்மையாக்க ஒன்றிணைய வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்,

இந்நிகழ்வில் இலங்கை வில்வித்தை சங்கத்தின் தலைவர் திரு.நிஷாந்த ஹேரத் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Social Share

Leave a Reply